விந்தோக், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முத்தரப்பு டி20 நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியின் மற்ற இரு அணிகளுடன் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. இறுதிப்போட்டி அதன்படி, 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியில் முதல் இடம்பிடித்த தென் ஆப்பிரிக்காவும், 4 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் பிடித்த ஜிம்பாப்வேயும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. இந்நிலையில், முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-final-south-africa-zimbabwe-today




