சேலம், பைக் திருடனை மடக்கிப் பிடிக்க முயன்ற இளைஞரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் திருட்டு சேலம் மாவட்டம் சூரமங்கலம் குரங்குசாவடியைச் சேர்ந்தவர் செல்வ விக்னேஷ். இவர் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து, வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் திருடுபோயிருந்தது. இதையடுத்து, வீட்டில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் வந்த வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த படக்காட்சிகளுடன் செல்வ விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கத்திக்குத்து இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்தில் குரங்குசாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாகவும், அந்த சம்பவங்கள் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளிலும் ஒரே நபரின் நடமாட்டம் பதிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பைக் திருடன் மீண்டும் அதே பகுதிக்கு வரக்கூடும் என கருதிய செல்வ விக்னேஷ், தனது நண்பருடன் சேர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பைக் திருடனை மடக்கி பிடித்தனர். அவரை போலீசாரிடம் ஒப்படைக்க முயன்றபோது, அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வ விக்னேஷ் மற்றும் அவரது நண்பரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் செல்வ விக்னேஷின் வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணை இந்த சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய பைக் திருடனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-stabbed-while-catching-bike-thief




