கோவை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கூட்டு பாலியல் வன்கொடு கோவை மாவட்டம் சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தொழில் நகரம், மருத்துவ நகரம், கல்வி நகரம் என்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தமான கோவை சமீப காலங்களாக பெண்கள் மீதான கொடுமைகள் அதிக அளவில் நிகழும் நகரம் என்ற அவபெயரையும் பெற்று வருவது வேதனை அளிக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக தனியாக வசிக்கும் பெண்கள், வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியுள்ள பெண்களை இதுபோன்ற ஆண்கள் தவறான நோக்கத்தில் பழகி அவர்கள் வாழ்க்கையை சீரழிப்பது அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்க செயல். சிங்கப்பெண் அதிரடிப்படை அனால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் ஆரம்பித்த நாட்களில் சுறுசுறுப்பாக இயங்கிய முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படையின் செயல்பாடுகள் இப்போது எங்கே என்று தமிழக மக்கள் தேடும் நிலைக்கு வந்து விட்டது. பெண்கள் பாதுகாப்பில் முந்தைய அரசைப் போலவே தவெக அரசும் தோல்வி அடைந்து கொண்டிருப்பதை தினந்தோறும் நடைபெறக் கூடிய செய்திகள் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பது அரசின் நிர்வாக தோல்விக்கு சாட்சி. தமிழக அரசு பள்ளிகளில் தற்போது மாணவிகளுக்கு தற்காப்புகலை பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது போல் பெண்கள் பணிபுரியும் இடங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து பெண்கள் மீதான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-lioness-task-force-has-reached-a-point-where-people-are-looking-for-where-it-is-vanathi-srinivasan




