பெர்லின், உலக நாடுகளில் எண்ணற்ற நிகழ்வுகள், திருவிழாக்கள் நடைபெற்ற வருகின்றன. அந்தவகையில், நேற்று ஜெர்மனி நாட்டில் பிரபல பீர் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது. முனிச் இந்த திருவிழா ஜெர்மனி நாட்டின் ஒரு முக்கிய நகரான முனிச்சில் அந்நகரின் மேயர் டோமினிக் கிரவுஸ் பாரம்பரிய முறைப்படி முதல் பீர் பீப்பாயைத் திறந்து வைத்து, இந்த மாபெரும் பீர் மற்றும் நாட்டுப்புற திருவிழாவைத் தொடங்கி வைத்தார். பீர் பிரியர்கள் இந்த திருவிழா நேற்று முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகம் முழுவதும் நடப்பு ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பீர் பிரியர்கள் இந்தத் திருவிழாவிற்கு வருவார்கள் என்று அதிகாரப்பூர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆடைகள் மேலும் இந்த திருவிழாவானது ஜெர்மனியின் பவேரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பீர் திருவிழாவானது பாரம்பரிய ஆடைகளான 'டிர்ன்ட்ல்ஸ்' மற்றும் 'லெடர்ஹோசென்' அணிந்து லட்சக்கணக்கான மக்கள் இசை மற்றும் நடனத்துடன் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். பேயர்ன்ஸ் முனிச் வீரர்கள் ஜெர்மனியின் பிரபல கால்பந்து கிளப்பான பேயர்ன்ஸ் முனிச் வீரர்கள், கையில் பீர் கோப்பையுடன் இந்த பீர் திருவிழாவில் பாரம்பரிய உடை அணிந்து தங்களது பெண் தோழிகளுடன் கலந்துகொண்டனர். பேயர்ன்ஸ் முனிச் வீரர்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/germanys-famous-beer-festival-begins-with-great-fanfare




