திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 79 ஆயிரத்து 455 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 36 ஆயிரத்து 834 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 80 லட்சம் ஆகும். பக்தர்களுக்கு 3 லட்சத்து 95 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 392 பக்தர்கள் மருத்துவச் சேவை பெற்றனர். தற்போது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வெளியே சிலாத்தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/tirupati-temples-single-day-hundi-offering-480-crore




