தூத்துக்குடி, மூன்றாவது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவர், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர். இவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி இசக்கிராஜ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய 5 சவரன் தங்க செயினை அடகு வைக்க தனியார் நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது பரிசோதனையில் அந்த நகை போலி நகை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனம் மீது பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சார்பில் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பரிசோதிக்கப்பட்ட தங்க செயின் மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் வேலவன் ஜூவல்லர்ஸ் நகைகளை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டுமென மனு அளித்தார். இந்த நிலையில், பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா வேலவன் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் அவதூறாக கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். நேற்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சார்பிலும் இசக்கிராஜா மீது நடவடிக்கை எடுத்திட புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீஸார், வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில், இசக்கி ராஜா கைது செய்யப்பட்ட தகவலறிந்து, பசும்பொன் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து தென்பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தடியடி மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக இசக்கி ராஜாவை தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொழுது வாகனத்தை மறித்து அவரது கட்சியினர் தடுத்து நிறுத்தி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் இசக்கி ராஜா மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் கட்சியினர் அப்போது போலீஸார் அவர்களிடம் கலைந்து செல்லும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீஸாருக்கும் அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட இசக்கி ராஜா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/isakkiraja-leader-of-the-pasumpon-makkal-katchi-has-been-arrested-following-a-complaint-that-he-threatened-a-private-jewelry-store




