புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”பிரதமர் மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். கடந்த 25 ஆண்டுகளில், முதலமைச்சராகவும் பிரதமராகவும் நீங்கள் பணியாற்றிய காலத்தில், சிறந்த நிர்வாகத்திற்கான பல புதிய சாதனைகளை படைத்துள்ளீர்கள். அத்துடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உத்வேகத்தை வழங்கியுள்ளீர்கள். பொது சேவை மற்றும் தேசக் கட்டமைப்பிற்கான உங்கள் பணிகளை நீங்கள் அயராது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக, உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நான் இறைவனை வேண்டுகிறேன்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/prime-minister-modis-birthday-president-droupadi-murmu-extends-wishes
