திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலையில் கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான இன்று காலை கற்பகவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி, ராஜமன்னார் அலங்காரத்துடன் கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதி கேலரிகள் மற்றும் கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிலர் கற்பூர ஆரத்தி காண்பித்து பகவானை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் திருமலையின் ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி, விஜிலன்ஸ் அதிகாரி முரளிகிருஷ்ணா மற்றும் தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/tirumala-brahmotsavam-day-4-govula-gopanna-on-kalpavriksha-vahanam




