முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துரோகம் பற்றியும், தேசிய விருது முடிவுகள் குறித்தும் டி. இமான் பேசியிருக்கிறார். Niram Movie அவர் பேசுகையில், "யாருக்குத்தான் வாழ்க்கையில துரோகம் நடக்காம இருக்கு? எல்லாரோட வாழ்க்கையிலயும் அப்படி ஏதோ ஒரு சம்பவம் இருக்கத்தான் செய்யும். இந்தப் படத்துக்காகப் பாடலாசிரியர் பா. விஜய் ஒரு பாடலை எழுதியிருக்காரு. அந்த வரிகள் எனக்கு ரொம்பவே 'ரிலேட்' ஆச்சு. அது எனக்கு மட்டும் இல்ல, அந்தப் பாடலைக் கேட்கும் அனைவராலும் அவங்க வாழ்க்கையில நடந்த ஏதோ ஒரு சம்பவத்தோட ஒத்துப்போகும். அதே வரி இயக்குநர், தயாரிப்பாளர்னு எல்லாருக்குமே கனெக்ட் ஆச்சு. ஒரு படைப்பின் நோக்கமே எத்தனை பேருக்கு அது போய் சேருதுங்கிறதுதான். ஒரு பாடலின் வரி பலரோட உணர்வுகளோடு ஒத்துப் போகும்போது அது பெரிய சந்தோஷம்தான்" என்றவர், தேசிய விருது முடிவுகள் பற்றி, "இந்த பாட்டு, அந்த பாட்டுங்கறதெல்லாம் தாண்டி, தேசிய அளவில் நம்ம மாநிலத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குதுன்னா, அதை ஒட்டுமொத்த தமிழர்களோட வெற்றியாத்தான் பார்க்கணும். இமான் அதை நம்ம மாநிலத்தின் பெருமையா நினைச்சு சந்தோஷப்படணும். அதைவிட்டுட்டு, 'இது தகுதிதானா'ங்கற ஆய்வுக்குள்ள போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்" எனப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/d-imman-comments-on-betrayal-and-national-awards-controversy




