சென்னை, தமிழ்நாடு சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி சவுமியா அன்புமணி, முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ளார். பாமக சார்பில் 4 பேர் சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சவுமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று சவுமியா அன்புமணி முன்வைக்கும் கருத்துகள் கட்சி கடந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், சட்டசபையில் உரையாற்றும் சவுமியா அன்புமணியின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது: அருமை. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி சவுமியா அன்புமணியைப் பாராட்டுகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/kamal-haasan-praises-soumya-anbumani-for-using-assembly-time-wisely




