காத்மண்டு, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு காரில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக நேபாள போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேபாளத்தின் பொக்கரா நகரின் பஜுவா பகுதியில் உத்தரபிரதேச பதிவெண் கொண்ட காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். 5 பேர் கைது சோதனையில் காரில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிகஷ் குமார், பர்ஜில் பஸ்வான், அபே குமார், பிரீதம் குமார், அபிஷேக் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/nepal-police-arrest-5-indians-for-allegedly-smuggling-narcotics




