தஞ்சாவூர், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. சரக்கு ரெயில் அரவை செய்யப்பட்ட அரிசி பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் 120 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு ஏற்றி வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து சரக்கு ரெயிலின் 21 வேகன்கள் மூலம் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/1250-tonnes-of-parboiled-rice-dispatched-by-goods-train-from-thanjavur-to-tirunelveli




