சென்னை, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 5-ந்தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று விலை மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. இன்றைய தங்கம், வெள்ளி விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 330-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.370-ம், பவுனுக்கு ரூ.2,960-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தைபோல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-continue-to-fall-what-is-the-current-situation-3




