புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், இந்திய பேட்மிண்டனுக்கு பெருமை சேர்த்திருக்கிறது ட்ரீசா ஜாலி–காயத்ரி கோபிசந்த் ஜோடி. சீனாவின் நம்பர் 1 ஜோடியிடம் அரையிறுதியில் போராடி தோல்வியடைந்த இந்திய ஜோடி, வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்தது. புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில், உலகின் நம்பர் 1 ஜோடியான லியு ஷெங்ஷு–டான் நிங் ஜோடியை ட்ரீசா–காயத்ரி எதிர்கொண்டனர். முதல் கேமில் அசத்திய இந்திய ஜோடி போட்டி தொடக்கம் முதலே இரு ஜோடிகளும் கடுமையாகப் போராடினர். முக்கியமான கட்டங்களில் நிதானமாக விளையாடிய ட்ரீசா–காயத்ரி, சீன ஜோடியின் தாக்குதல் ஆட்டத்துக்கு திறம்பட பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து புள்ளிகளைக் கைப்பற்றிய இந்திய ஜோடி, முதல் கேமை 21–18 என்ற கணக்கில் கைப்பற்றி 1–0 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தை சமன் செய்த சீனா இரண்டாவது கேமிலும் தொடக்கத்தில் இரு ஜோடிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் கேம் முன்னேறியபோது லியு–டான் ஜோடி வேகத்தை அதிகரித்தது. இந்திய வீராங்கனைகளின் தாக்குதல் ஆட்டத்தை கட்டுப்படுத்திய சீன ஜோடி, தொடர்ந்து புள்ளிகளைக் குவித்தது. இதனால் இரண்டாவது கேமை 21–13 என வென்ற லியு–டான், போட்டியை 1–1 என சமன் செய்தது. தீர்மானிக்கும் கேமில் ஆதிக்கம் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆரம்பம் முதலே சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் வேகம் மற்றும் துல்லியமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க ட்ரீசா–காயத்ரி முயன்றபோதிலும், புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை.இறுதியில் 21–8 என மூன்றாவது கேமையும் கைப்பற்றிய லியு ஷெங்ஷு–டான் நிங் 2–1 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் காலிறுதியில் உலக தரம் 4-இல் உள்ள சீன ஜோடியான ஜியா யி ஃபான்–ஜாங் ஷு ஷியான் அணியை 16–21, 21–15, 21–13 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருந்தனர். இதன்மூலம் 2011-ல் ஜ்வாலா குட்டா–அஷ்வினி பொன்னப்பா வெண்கலம் வென்ற பிறகு, உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://sports.vikatan.com/bwf-treesa-jolly-gayatri-gopichand-clinch-bronze




