புதுடெல்லி, யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக, ஓய்வு பெற்ற அட்மிரல் டி.கே.ஜோஷி, கடந்த 2017 அக்டோபர் 6ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய துணைநிலை கவர்னராக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தினேஷ் சர்மாவை நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தினேஷ் சர்மாவின் எம்.பி., பதவிக்காலம், வரும் நவம்பர் 25ல் முடிவடைகிறது. இது குறித்து, சமூக வலைதளத்தில் தினேஷ் சர்மா வெளியிட்ட பதிவில், 'என்னை அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக நியமித்த ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. இந்த புதிய பொறுப்பு வெறும் பதவியல்ல; மாறாக, நம் அரசியலமைப்பு சட்டம், நாடு மற்றும் மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு. இந்த கடமையை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், தேச பக்தியுடனும் நிறைவேற்றுவேன்,’ என அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/dinesh-sharma-appointed-as-lieutenant-governor-of-the-andaman-and-nicobar-islands




