முதல்-மந்திரிகள் மாநாடு இந்தியாவின் தென்மண்டல மாநிலங்களாக ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை உள்ளன. புதுச் சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களையும் இது உள்ள டக்கியுள்ளது. இந்த மாநிலங்களின் மண்டல மாநாடு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுவது வழக்கமாகும்.இதற்கு முன்பு 30-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இந்தநிலையில் 31-வது மாநாடு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில், சென்னை கோவளத்தில் உள்ள தாஜ் பிஷ்சர்மேன்ஸ் கோவ் என்ற நட்சத்திர ஓட்ட லில் நடைபெறவுள்ளது. 5 முதல்-மந்திரிகள் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான தென் மண்டல குழுவில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையிலும் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பார் என்று கூறப்படு கிறது. மேலும், முதல்-மந்திரிகள் சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), டி.கே.சிவ குமார் (கர்நாடகம்), சதீசன் (கேரளம்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), புதுச்சேரி முதல்-அமைச்சர் ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இந்த மாநிலங்களின் முக்கிய மந்திரிகள், அரசுத் துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மாநில எல்லைப்புறங்களை ஓட்டியுள்ள மாவட்ட கலெக்டர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டின் முன்னோட்டமாக, தமிழகத்தின் அனைத்து அரசுத்துறை செய லாளர்களின் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது. என்னென்ன அம்சங்கள்? இந்த மாநாட்டில் மிக முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மாநிலங்களின் எல்லைப்புறங்களில் உள்ள பிரச்சினைகள், கடத்தல் குற் றங்கள், மாநிலம் விட்டு மாநிலம் சென்று பதுங்கியுள்ள குற்றவாளிகள் குறித்த தகவல்கள், குற்றங்கள்-நிகழ்வுகள் குறித்த தகவல் பரிமாற்றம், அதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம்,மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பகிர்வு, பிராந்திய உள்கட்ட மைப்பு மற்றும் இணைப்பு, எல்லைப் பகுதிகளில் ஏற்படும் பதற்றநிலை தணிப்பு, கடல்சார் விவகாரங்கள், கடலோரக் காவல், எல்லைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு. சாலை போக்குவரத்து வாகன கண்காணிப்பு, எல்லையோர சோதனை சாவடிகள், சுற்றுச் சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.இந்த மாநாட்டின் இறுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரை யாற்றுவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/southern-zone-chief-ministers-conference-chaired-by-amit-shah-two-day-event-held-in-chennai




