சென்னை, இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினம் இன்று! சமத்துவம், சுயமரியாதை மற்றும் மனித உரிமைகள் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் வாழ்ந்த இமானுவேல் சேகரன் அவர்கள், தனது இளம் வயதிலேயே சமூக மாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர். அவரது போராட்டமும் தியாகமும் சமூக நீதிக்கான பயணத்தில் என்றும் அழியாத தடமாகத் திகழ்கிறது. அவரது நினைவு நாளில், சாதி வேறுபாடுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கும் வலிமையான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/immanuel-sekaranar-remembrance-day-nainar-nagendran-pays-tribute




