திருச்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- வாக்குறுதி “தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஒரு லட்சத்திற்கும் கீழ் விவசாய கடன் பெற்றிருந்தால் ரூபாய் 75 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும், ஒரு லட்சத்திற்கும் மேல் விவசாய கடன் பெற்றிருந்தால் ரூபாய் 35 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து 17 நிபந்தனைகளை விதித்து விவசாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். கண்டனம் குறிப்பாக விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடும் மழை மற்றும் வெயிலிலும், பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகிறார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஒடுக்கும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை வேடிக்கை பார்க்கும் மாநில அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தேர்தல் வாக்குறுதியின்படிஉடனடியாக விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாநில அரசு விவசாயிகளை ஒடுக்கும் முற்றுகைப் போராட்டம்விதமாகவும், நசுக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறது. முற்றுகைப் போராட்டம் ஆகையால் இத்தகைய போக்கை கண்டித்து வரும் 24-ந்தேதி சென்னை தலைமை செயலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து முற்றுகை போராட் டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். மேலும் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குறிப்பிட்ட விவசாயசங்கங்களை அழைத்து மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே, அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்து உடனடியாக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-associations-announce-a-siege-protest-in-front-of-the-secretariat-on-the-24th




