டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காகப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவர். இந்தியா, சீனா மோதல் 2019-ம் ஆண்டு ஜின்பிங் கடைசியாக இந்தியா வந்தார். 2020-ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளுக்கு இடையேயும் மோதல் நடந்தது. அதன்பிறகு, இரு நாடுகளின் உறவில் விரிசல் விழுந்தது. கடந்த ஆண்டு, ஷாங்காய் மாநாட்டிற்காக இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்றதையடுத்து, கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ஜி ஜின்பிங். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு மோடி பதிவு நேற்று டெல்லியில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். அது குறித்து இந்தியப் பிரதமர் மோடி, “டெல்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இடையே அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்தேன். இந்தியா-சீனா இடையிலான அனைத்துத் துறை உறவுகள் குறித்தும் நாங்கள் விரிவாக ஆய்வு செய்தோம். மேலும், அடுத்த ஆண்டு தொடங்கவிருக்கும் சீனாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பிற்கான எங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜி ஜின்பிங் பேச்சு இந்தியா, சீனா உறவு குறித்து ஜி ஜின்பிங், “சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஒருவரின் பலத்திலிருந்து மற்றவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, ஒருவருக்கொருவர் வெற்றி பெற உதவி செய்து, ஒன்றாக வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல வேண்டும். கொந்தளிப்பான சர்வதேசச் சூழலுக்கு மத்தியில், இரு தரப்பும் எதிர்காலத்தையும் மக்களின் நலனையும் மனதில் கொள்ள வேண்டும். மேலும், உலக அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தும் வகையில், பிரிக்ஸ் அமைப்பின் கூட்டுறவை இணைந்து ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். “சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/modi-xi-meet-in-delhi-signals-thaw-in-india-china-ties




