பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. வேட்டுவம் இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. கேங்ஸ்டர் கதை சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது. நடிகர் தினேஷ் பிறந்தநாளையொட்டி ‘வேட்டுவம்’ கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ இந்த நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ, ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/pa-ranjiths-vettuvam-film-character-introduction-video-out




