சென்னை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதால் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். காலை 9 மணிக்கே பேருந்தில் அமர்ந்திருந்தும், நீண்ட நேரமாக பேருந்து இயக்கப்படவில்லை என்றும், பேருந்து புறப்படும் நேரம் மற்றும் உரிய அறிவிப்புகளை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும் பேருந்து நிலையத்தில் ஆய்வுக்கு வந்த போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேருந்துகள் இயக்கப்படும் நேரம் மற்றும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகளை பேருந்து நிலையத்தில் முறையாக வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/bus-delays-at-kilambakkam-passengers-argue-with-the-transport-department-secretary-who-arrived-for-an-inspection




