செயின்ட் லூசியா, கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. செயின்ட் லூசியா கிங்ஸ் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் மோதல் இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகள் மோதின. மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பார்படோஸ் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்டு அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் வெற்றி இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய செயின்ட் லூசியா 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்சை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய பார்படோஸ் வீரர் குடேக்ஷ் மொடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-barbados-stunning-win-over-saint-lucia




