தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, குடியிருப்பு பகுதிக்கு அருகில் செயல்படும் தேங்காய் சிரட்டை பதப்படுத்தும் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிரட்டைகளுடன் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி கழிவுகளும் எரிக்கப்படுவதால், அடர்ந்த கரும்புகை பரவி மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், நட்டாத்தி–மீனாட்சிபட்டி சாலையில் புகை சூழ்வதால் வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thick-black-smoke-emanating-from-a-coconut-shell-processing-unit-in-thoothukudi-causes-distress-to-the-public




