மீஞ்சூர், தாலி கட்டும் நேரத்தில் போலீசுக்கு போன் செய்து மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதனால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். திருமண வரவேற்பு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந் தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதி காலையில் முகூர்த்த ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மணப்பெண்ணின் பெற்றோர் தூங்கிக்கொண்டிருந்த மணப் பெண்ணை தட்டி எழுப்பி திருமணத்துக்கு தயாராக இருக்க சொன்னார்கள். ஆனால் மணப்பெண் அடம் பிடித்து மேக்கப் போட வேண்டாம், எனவும் மணவறைக்கு வரமாட்டேன். தாலி கட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை 5.30 மணி அளவில் மணப் பெண் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். காப்பகத்தில் ஒப்படைப்பு இதைத்தொடர்ந்து மீஞ்சூர் போலீசார், பொன்னேரி அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணப்பெண்ணிடம் விசா ரணை நடத்தினர். மணப்பெண் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளாமல் பிடி வாதமாக இருந்தார். பின்னர் பெற்றோர் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை விட்டு விட்டு சென்று விட்டனர். தனியாக இருந்த மணப்பெண்ணை போலீசார் பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியம் அலமாதி கிராமத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமணம் நின்றதால் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்து டன் திரும்பினர். திருமண மண்டபத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டது. மணப்பெண் வேறு ஏதாவது நபரை காதலிக்கிறாரா? அல்லது உறவினர்களுக்கிடையே பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வரு கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-shocking-act-of-the-bride-while-tying-the-thali




