மும்பை ஐ.ஐ.டியில் தேர்வில் மொபைல் போன் மூலம் காப்பியடித்த மாணவர் சாஹில் பிடிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு தேர்வு மையத்தில் இருந்த பேராசிரியர் சூரிய நாராயணா மாணவனை சாதி ரீதியாகத் துன்புறுத்தியது காரணம் என்று கூறி ஐ.ஐ.டி மாணவர்கள் கடந்த 3 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அம்மாணவர்களின் பிரதிநிதிகளுடன் ஐ.ஐ.டி நிர்வாகம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் மாணவர்கள் தரப்பில் 18 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவரின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை, ஐ.ஐ.டி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் மாணவர் நலன், மனநலப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் தொடர்பான தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மாணவர்கள் முன்வைத்தனர். மும்பை ஐஐடி கீழ்ப்படிந்த ஐ.ஐ.டி மாணவர்கள் தாங்கள் முன்வைத்த 18 கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் ஐ.ஐ.டியின் இயக்குனர் பேராசிரியர் ஷிரீஷ் கேதாரே மூன்று நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களின் கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதில் மாணவர் தற்கொலை தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் இறுதி விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், சமீப காலங்களில் ஐ.ஐ.டி. வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர் சாஹில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பேராசிரியர் சூரிய நாராயணாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தற்போது குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து பேராசிரியர் சூரியநாராயணா விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஐ.ஐ.டி நிர்வாகம் பேராசிரியர் சூரியநாராயணாவிற்கு ஆதரவாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மாணவர் அனுமதியில்லாமல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் கண்டறிந்த பிறகு பேராசிரியர் ஐ.ஐ.டி நெறிமுறையைப் பின்பற்றினார் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் சாஹில் ஐ.ஐ.டியின் துன்புறுத்தல் மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெற்றோர் குற்றஞ்சட்டுகின்றனர். IIT Madras: ``ஐஐடி மெட்ராஸில் மருத்துவக் கல்வி" - இயக்குநர் காமகோடி சொல்லும் திட்டம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/student-suicide-due-to-caste-based-harassment-iit-bombay-accepts-demands-of-students




