விந்தோக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஜிம்பாப்வே 144 ரன்கள் அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரையன் பென்னட் அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜன்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா வெற்றி இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 13.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ் 32 பந்துகளில் 75 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-south-africa-crushes-zimbabwe-for-big-win




