சென்னை, மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஜந்தர் மந்தரில் வேலை கேட்டுப் போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கண்ணீரை, வெற்று 7.8% ஜிடிபி புள்ளிவிவரங்களால் இனி மூடி மறைக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தியின் இந்தக் கட்டுரை, பாஜக அரசின் வெற்று விளம்பரப் பொருளாதாரத்தை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளது. தொழில் முதலீட்டை பெருக்குகிறோம் என்று கூறி 2019-ல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய வரிச்சலுகையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமே 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சம் கோடி). இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் தனியார் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை; மாறாக தங்கள் லாபத்தை பதுக்கிக் கொண்டன. கடந்த பத்தாண்டுகளாக தனியார் முதலீடுகள் 14 சதவீதத்தில் இருந்து 10-12 சதவீதமாகக் குறைந்துபோயுள்ளது. அப்பட்டமான மோசடி மின்சாரப் பயன்பாடு, வங்கி கடன் வளர்ச்சி, நுகர்வு என எந்தவொரு உண்மையான பொருளாதாரக் குறியீடுகளோடும் கள எதார்த்தம் பொருந்தவில்லை என்பதை முன்னாள் பொருளாதார ஆலோசகரே சுட்டிக்காட்டியுள்ளார். வேலைவாய்ப்பின்றி தெருவில் நிற்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல், ஏட்டளவிலான புள்ளிவிவரங்களை மட்டும் ஊதிப் பெருக்கிக் காட்டுவது அப்பட்டமான மோசடி. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி மக்களின் வாங்கும் திறனிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிலும்தான் இருக்கிறது. ஆனால், களத்தில் வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் தாண்டவமாடும் சூழலில், மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/78-gdp-growth-figures-cannot-hide-the-tears-of-the-youth-manickam-tagore



