சென்னை, குதிரை பேரம் நடந்ததாக கவர்னர் மாளிகையில் திமுக சார்பில் மனு அளித்த நிலையில் சென்னையில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முதல்-அமைச்சரே குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக கவர்னர் மாளிகையில் புகார் அளிக்கப்பட்டது. கரூரில் முதல்-அமைச்சர் பேசியது உண்மைக்கு மாறாகவும் விசாரணையை பாதிக்கும் வகையிலும் இருந்தது. கவர்னரிடம் மனு அளித்தீர்களா? என்று நீதிமன்றத்தில் கேட்பார்கள். அதனால் அங்கு புகார் மனு கொடுத்தோம். கவர்னர் நடவடிக்கை எடுக்க அவகாசம் வழங்குவோம். எடுக்காவிடில் சட்ட நடவடிக்கையை தொடங்குவோம். கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டதாக வரம்பு மீறி பேசியிருக்கிறார். இதுபோன்று முதல்-அமைச்சர் விஜய் பேச ஆரம்பித்தால். நாங்களும் பேச வேண்டிய நிலைக்கு வந்துவிடுவோம். தவெகவினர் தன்னை அழைத்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கரே கூறி இருக்கிறார். விஜயபாஸ்கர் வெளிப்படையாகவே பேசியுள்ளார். குதிரைபேர ஊழலுக்கு இதுவே தகுந்த ஆதாரங்கள். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-is-involved-in-horse-trading-rs-bharathi-alleges




