நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காப்பை வீழ்த்தி முதல் முறையாக ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கோகோ காப் - ரைபகினா ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானின் எலினா ரைபகினா மோதினர். கம்பேக் கொடுத்த ரைபகினா ஆரம்பம் முதலே இருவரும் கடுமையாக போராடியநிலையில், முதல் செட்டை காப் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து அபாரமாக கம்பேக் கொடுத்த ரைபகினா, 2-வது செட்டை 6-4 என்ற கணக்கிலும், 3-வது செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார். இதன் மூலம் 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் காப்பை வீழ்த்திய ரைபகினா, முதல் முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இறுதிப்போட்டி இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அரினா சபலென்காவை ரைபகினா எதிர்கொள்கிறார். முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-rybakina-advances-to-the-final-for-the-first-time-after-defeating-gauff



