மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடாளுமன்ற கூட் டத்தொடரில் நிறைவேற்ற உத்தேசித்துள்ளது.இந்தநிலையில் தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளை எம்பிக்கள் கூட்டம் இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், மத்திய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந் தாய்வுக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக நிபந்தனை தமிழக எம்.பி.க்களுக்கு தவெக அரசு அழைப்பு விடுத்த நிலையில், இதில் திமுக பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், தவெக அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது. திருமாவளவன் வலியுறுத்தல் புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதால் மேகேதாட்டு விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பான எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு, மேகதாது போன்ற பிரச்னைகளில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-thirumavalavan-urges-dmk-to-participate-in-mps-meeting




