Full artikkel
சட்டமன்றக் கூட்டத்தொடர் நான்காவது நாளாக இன்று (ஜூன்.23) நடைப்பெற்றது. கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார். அவையில் பேசிய அவர், "எனக்கும் எங்களது அமைச்சருக்கும் எதுவும் தெரியாது என்று பேசுகின்றனர். அரசியல் ரீதியான கொள்கையிலும் மாநில உரிமையிலும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை. முதல்வர் விஜய் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்டவர்கள் நாம். நீட் தேர்வு கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 10 மாத காலம் டிஜிபியே இல்லாமல் இருந்தது. தவெக ஆட்சியில் டிஜிபி நியமனம் செய்யபட்டார். போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். டாஸ்மார்க்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை அடித்தனர். அதெல்லாம் தற்போது இல்லை. இது மன்னராட்சி இல்ல. இது மனசாட்சி உள்ள மக்களாட்சி. எதிர்க்கட்சியினருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ், கலாசாரம் என்று சொல்லி இரட்டை வேஷம் போடுபவர்கள் நாங்கள் இல்லை. தமிழ் எங்கள் உயிர்நாடி என்பதில் உறுதியாக இருப்போம். முதல்வர் விஜய் மாநில உரிமைகளில் எப்போதும் உறுதியாக இருப்போம். அதேசமயம் அரசியல் வேறு, ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நிர்வாக அணுகுமுறை வேறு. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களுக்கு பாடம் எடுப்பதாகச் சொல்லி உங்கள் வேஷங்களை நீங்களே கலைத்து கொள்கிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள். அதேபோல நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எங்களை 'ஈவில்ஸ்', 'ஈவில்ஸ்', என்றார். 'ஈவில்ஸ்' என்பதை டெவில்ஸ் பேசக் கூடாது. அவர்கள் இருந்திருந்தால் ஒரு ஆக்ஷன் இங்கு பண்ணிருப்பேன். எல்லாரும் வெளிநடப்பு பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் செய்கிறேன்" என்று கூறி ஆக்ஷனோடு பேச்சை முடித்துகொண்டார். "நான் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" - முதல்வர் விஜய் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




