சென்னை, இரட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளையொட்டி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார உரிமைகளுக்காக குரல் எழுப்பியவரும், சமத்துவமும் சமூகநீதியும் நிலைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை இலக்காகக் கொண்டு போராடியவருமான இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று. தனது எழுத்து, பேச்சு மற்றும் சமூகப் பணிகளின் மூலமாகச் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தொடர்ந்து களமாடி, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்து போற்றிடுவோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-always-remember-and-honor-rettaimalai-srinivasan-ttv-dhinakaran




