கலர் அப்பளத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் மற்றும் ரசாயனச் சேர்மங்கள் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதிகமாக சாப்பிட்டால் அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் புண், குடல் பாதிப்பு போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். தரமற்ற நிறமிகள் நீண்ட காலம் உடலில் தேங்கினால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை பாதிக்கும் அபாயம் உள்ளது. தடை செய்யப்பட்ட அல்லது தரமற்ற செயற்கை நிறமிகளை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். குழந்தைகளுக்கு அலர்ஜி, தோல் அரிப்பு மற்றும் கவனச் சிதறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் போன்ற இடங்களில் விற்கப்படும் தரமற்ற கலர் அப்பளங்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதிக உப்பு மற்றும் எண்ணெய் இருப்பதால் உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கலாம். அதற்கு பதிலாக உளுந்து, அரிசி போன்ற இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய அப்பளங்களை அளவோடு சாப்பிடுவது பாதுகாப்பான தேர்வாகும். இதயம் முதல் கண்கள் வரை பாதுகாக்கும் வெங்காயத்தாளின் மகத்துவம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/the-other-side-of-colored-papads-what-are-the-health-risks




