ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷன நிலை நிலவியது. இதனிடையே விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏற்காடு ஏரி, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் பக்கோடா பாயிண்ட் போன்ற அனைத்து முக்கிய இடங்களை சுற்றி பார்த்தனர். இதனால் ஏற்காட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட் டது. குறிப்பாக, ஏரிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் படகு இல்லத்தில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். போக்குவரத்து நெரிசல் மேலும், தாவரவியல் பூங்கா மற்றும் குகை கோவில் போன்ற பகுதிகளி லும் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். அவர் கள் ஏற்காட்டின் சிறப்புகளான வீட்டு முறை தயாரிப்பு சாக்லேட்டுகள் காபி, மிளகு போன்ற பொருட்களை வாங்குவதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹோம்ஸ்டேக்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின. மேலும், கார், சுற்றுலா வாகனங்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தப் பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-flocked-to-yercaud-for-the-holidays




