திண்டுக்கல், 10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராம் குமார் - சித்தார்த் மகாதேவன் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ராம் குமார் 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சித்தார்த் மகாதேவன் 60 ரன்களில் போல்ட் ஆனார். கேப்டன் பால்சந்தர் அனிருத் 7 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இது தவிர அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-madurai-sets-a-target-of-196-runs-for-the-salem-team




