வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்பெயினின் ஜெசிகா பவுஜாஸ் மனேரோவை வீழ்த்தினார். தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை நெருங்கும் ரைபகினா அடுத்து உக்ரைனின் யுலியா ஸ்டாரோடப்ட்சேவாவுடன் மோதுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/tennis/us-open-tennis-coco-gauff-wins




