4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 14-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 9.5 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பி யன் அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், கங்காஸ் கிராண்ட்மாஸ் டர்ஸ், அலாஸ்கன் நைட்ஸ், அமெரிக்கன் கேம்பிட்ஸ், மும்பை மாஸ்டர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. அணிகளில் உலக சாம்பியன்கள், கிராண்ட்மாஸ்டர், இளம் சாதனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் கார்ல்சென் அல்பின் அணியி லும், உலக சாம்பியன்ஷிப்பில் குேகசுடன் மோத உள்ள உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தா ரோவ் கேம்பிட்ஸ் அணியிலும், 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் நைட்ஸ் அணியிலும் அங்கம் வகிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ் முக், ஹரிகா, கோனரு ஹம்பி ஆகியோரும் களம் காண உள்ளனர். அதே சமயத்தில் குேகஷ், பிரக்ஞானந்தா இந்த முறை விளையாடவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/othersports/the-global-chess-league-tournament-began-in-bengaluru




