கோவை, கோவை சரவணம்பட்டியில் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாற்று திறனாளி வீரர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி என்பதை விட மாற்றத்திற்கான நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. த.வெ.க. அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு எந்த அளவு முன்னுரிமை கொடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/indian-para-cricket-league-match-in-coimbatore-mla-kanimozhi-santhosh-participates-in-the-inaugural-event




