சென்னை, முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) கரூர் புறப்பட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில், அவரது கரூர் பயண திட்டத்தின் முழு விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கரூர் செல்வதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 9 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கரூருக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். மதியம் 12.15 மணிக்கு கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். சுமார் 1 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்து மதியம் 1.25 மணிக்கு கரூரில் உள்ள சர்க்யூட் ஹவுசுக்கு வருகை தருகிறார். அங்கு மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதல்-அமைச்சர் விஜய், மதியம் 2.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 3 மணிக்கு அங்குள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் விஜய், மாலை 4.10 மணிக்கு அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வருகிறார். மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் முதல்-அமைச்சர் விஜய், தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், இரவு 7.10 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு நீலாங்கரை இல்லத்தை சென்றடைகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/full-details-of-chief-minister-vijays-karur-trip-released




