சென்னை, நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தலா, 1,000 மெகாவாட் திறன் உடைய, 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், மூன்றாம் அணு உலையில், 2027 டிசம்பரிலும், நான்காம் அணு உலையில், 2028 டிசம்பரிலும், மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரு அணு உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 1,507.51 மெகாவாட் மின் சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்குவதாக, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஆந்திராவுக்கு 226; கர்நாடகாவுக்கு, 256; புதுச்சேரிக்கு, 9 மெகா வாட் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனங்கள், எந்த மாநிலத்தில் மின் நிலையம் அமைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு, உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், 50 சதவீதம் ஒதுக்கப்படும். ஆனால், கூடங்குளம் விரிவாக்க மின் நிலையத்தில் இருந்து, தமிழகத் திற்கு 75.63 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு விபரம் தொடர்பாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆணை விரைவில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-electricity-allocated-to-tamil-nadu-from-the-kudankulam-nuclear-power-plant




