கோவை, சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கோவிந்தநாயக்கன்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் ரோகித் (13 வயது). வையம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ரோகித் சரிவர படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர். மேலும் சரியாக படிக்காவிட்டால் விடுதியில் சேர்த்துவிடுவோம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரோகித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-scold-boy-for-poor-studies-8th-grader-takes-extreme-step




