விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர் சேட்டு மனைவி செல்வி (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கினார். மறுநாள் காலை எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3.25 பவுன் தாலி சங்கிலியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் நைசாக கழுத்தில் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/villupuram-jewelry-stolen-from-a-woman-sleeping-outside-her-house




