ராமேஸ்வரம், ராமேஸ்வரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் 112 கிலோ சூரை மீன் சிக்கியது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் 6 மீனவர்கள், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது பெரிய மீன் ஒன்று அவர்கள் வலையில் சிக்கியது. அந்த மீனை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அது சூரைமீன் என தெரியவந்தது. 112 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட அந்த மீனை மற்ற மீனவர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்த மீனை வியாபாரி ஒருவர் ரூ.22 ஆயிரம் கொடுத்து வாங்கினார். பின்னர் அந்த மீன் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று 106 கிலோ எடை கொண்ட சூரைமீன், ஏற்கனவே மீனவர்கள் வலையில் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/rameswaram-112-kg-tuna-caught-sold-for-rs-22k



