சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் 5-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/slight-rise-in-gold-prices-todays-status-2



