சென்னை, தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி யர்களுக்கு விலையில்லா நவீன மிதி வண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காகத் தமிழ்நாடு அரசு மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் நடப்பு 2026-27-ம் கல்வியாண்டிற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், அவற்றுடன் தலைக்கவசம் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தகுதியான உற்பத்தி மற்றும் தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் 29, 2026 முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 150 நாட்களுக்குள் விநியோகம் செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும். இதில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளைச் செப்டம்பர் 28, 2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியாகத் திறக்கப்படும். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-with-helmets-and-water-bottles-tamil-nadu-government-invites-tenders




