சென்னை, காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியில் அமைச்சர் ஆய்வு இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் வருகின்ற 22.09.2026 அன்று அடையாறு மண்டலம், காந்தி கிராமம் சென்னை நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு இப்பள்ளியில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி இன்று (19.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ம.மரியம் பல்லவி பல்தேவ், சமூக நல இயக்குநர் டாக்டர் ரா.பிருந்தா தேவி, இணை ஆணையாளர் (கல்வி) க. கற்பகம், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/expansion-of-breakfast-scheme-minister-jagadeeswari-inspects-gandhigram-middle-school




