சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், ``எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேசாமல் இன்னொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வருவதுபோல 'இவருக்கு பதில் இவர்' பாணியில் பதில் சொல்கிறார்கள். முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாள்கள் நேரமிருக்கிறது. அவர் நன்றாக முன் தயாரிப்பு செய்து வரட்டும். ரோல் கேமரா ஆக்சன் மோடில் சம்பந்தமே இல்லாமல் குட்டிக்கதைகள் சொல்லாமல் மக்களுடைய கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்." என முதல்வரை கடுமையாக விமர்சித்தார். இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்றபோது ஒரு கட்டத்தில் எழுந்த முதல்வர் விஜய், ``உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தை திங்கள்கிழமை கொடுக்கிறேன். நான் இங்கே இல்லையென்றாலும் உங்களின் கேள்விகள் எனக்கு வந்துவிடும். நான் பேசும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது" என்றார். சொல்லிவிட்டு அவையை விட்டு வெளியேறினார். CM Vijay உடனே திமுக உறுப்பினர்கள் அமளி செய்ய. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ``கடைசியாக யார் ஓடினார் என்பது எல்லாருக்குமே தெரியும். இதை சொல்லிவிட்டு அவர் ஓடிவிட்டார்" என்றார். 'குட்டிக்கதை சொல்லாமல் நேராக பதில் சொல்லுங்கள்!' - முதல்வரை நேரடியாக சாடிய உதயநிதி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/tn-assembly-cm-vijay-vs-udhayanidhi-fiery-clash-erupts-over-who-ran-away-first



