செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ரெயில் நிலையம் அருகே, கடந்த 22-ந்தேதி மாலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். செயின் பறிப்பு சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை அழுதபடி பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சுமார் 40-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் விருதுநகரில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விருதுநகரில் பதுங்கியிருந்த கார்த்திக் ராஜ் என்ற இளைஞரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டு ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-chain-snatching-from-a-female-teacher-in-vandalur-youth-hiding-in-virudhunagar-arrested




