சென்னை, தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று அறிவித்திருந்த மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மதுக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், இன்று முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அமைச்சர் விக்னேஷ் பேச்சுவார்த்தை அவர்களுடன் இந்த மாதம் 24-ம் தேதி, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் திருப்தி அடையாததால், திட்டமிட்டபடி போராட்டம் நடந்தப்படும் என தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், நேற்று மாலை அவர்களுடன், அமைச்சர் விக்னேஷ் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு அந்த பேச்சுவார்த்தையில், 'வரும் 31-ம் தேதி மது விலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, சீருடை உள்ளிட்ட கோரிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்படும்' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tasmac-employees-strike-in-tamil-nadu-postponed




