புதுடெல்லி, இமயமலை நாடான நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) 469-ஆக உயர்ந்தது; அங்கு மூன்றாவது நாளாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், சுமார் 1,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் விஜய், மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையைக் கண்டறிந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார். 21 பேர் இதனிடையே நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய, கும்பகோணத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற 57 பேரில் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 பேர் இன்று இரவு சென்னை வந்து நாளை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. சென்னை இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45க்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் அவர்கள், இன்று இரவு 10.25 மணிக்கு சென்னைக்கு வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்சங்கர் இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்களை சந்தித்தேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தது நெகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இந்த மீட்புப் பணிக்காக நேபாள ராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமூகமாக ஒருங்கிணைத்த காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன்” என்று அதில் பதிவிட்டுள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன். இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் (@NepaliArmyHQ) மற்றும் அந்நாட்டு அரசுக்கு… — Dr. S. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/21-tamils-arrive-in-delhi-from-nepal-returning-to-chennai-tonight




